மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

மும்பை,: மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்று இரவு முதல் மும்பை விமான நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான புறப்பாடு மற்றும் வருகை தாமதம் ஆனது. விமான போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மொத்தம் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், ‘‘விமான போக்குவரத்து இடையூறை சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஜெட் ஏர்வேசுக்கு உதவுவதற்காக அதன்...