கேரளாவில் பாஜ சார்பில் நடத்தப்படும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை எடியூரப்பா தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: காசர்கோட்டில் இருந்து பத்தனம்திட்டா வரை செல்லும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரையை நேற்று, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்தார்.சபரிமலை ஐயப்பன் கோயில் புகழை சீர்குலைக்க மார்க்சிஸ்ட் கட்சி எடுக்கும் நடவடிக்கையை கண்டித்து, கேரளாவின் காசர்கோடு முதல் பத்தனம்திட்டா வரை பா.ஜ. சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை நடத்தப்படுகிறது.  கேரள மாநில பாஜ தலைவர் தரன்பிள்ளை வழி நடத்தும் இந்த யாத்திரையின் தொடக்க விழா நேற்று காசர்கோடு அருகே மதூரில் உள்ள சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடந்தது.

கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இந்த ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். யாத்திரையில் கேரள மாநில பாஜ தலைவர்களான கிருஷ்ணதாஸ், சுரேந்திரன், ராதாகிருஷ்ணன்,  ஓ.ராஜகோபால் எம்எல்ஏ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.இந்த யாத்திரை தலசேரி, மட்டனூர், கோழிக்கோடு, குருவாயூர், கொடுங்கல்லூர், மூவாற்றுப்புழா வழியாக 13ம் தேதி பத்தனம்திட்டாவை அடைகிறது. அங்கு நடக்கும் நிறைவு விழாவில் 50 ஆயிரம் பெண்கள் உள்பட ஒரு லட்சம்  பேர் கலந்துகொள்கின்றனர் என்று பாஜ தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் கூறினார். நிறைவு விழாவில் அமித்ஷா உட்பட கட்சியின் தேசிய நிர்வாகிகள் பலர் கலந்துக் கொள்கின்றனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தலைவர்கள் குறித்து அவதூறு பேச்சு...