அரசு பாடநூல்கள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: மாணவர்கள் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு பாடநூல் கழக இணைய தளத்தில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து 2018-2019 ஆண்டுக்கு முதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அச்சிடப்பட்ட பாடநூல்கள் தவிர மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப பாடநூல்களை படிப்பதற்கு வசதியாக மேற்கண்ட துறையின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேர்தல் விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு