விதி மீறி பட்டாசு வெடித்ததாக பதிவான வழக்குகளை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எம்.கலைச்செல்வி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரின் தனி பிரிவில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
வெடிப்பதால் விளையும் மாசு கட்டுப்பாடு குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டு விதியை அறிவித்திருந்தது.

இதையொட்டி கடந்த 6ம் தேதி அரசு விதிகளுக்குட்பட்டு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர். ஆனால் விதி மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் மீது சுமார் 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் நோக்கில் அப்பாவி பொதுமக்கள் மீது வேண்டுமென்றே பதியப்பட்ட வழக்குகள் ஆகும். இதனால் வழக்கு பதிய பெற்றவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விதி மீறி பட்டாசு வெடித்ததாக காவல் துறையால் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாகவும், சங்கத்தின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காஷ்மீரில் முன்னாள் முதல்வர் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்