குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகள் மீண்டும் ஜாமீன் கோரி மனு

சென்னை: குட்கா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் 2 பேர் மீண்டும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய தமிழகத்தை சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது.


இது தொடர்பாக  சிபிஐ அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவகுமார்  மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காற்றில் பறந்த அதிகாரிகள் உத்தரவு கடலூரில் பயனற்ற பயணியர் நிழற்குடை