சில்லி பாயின்ட்

* அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்க உள்ளதால், முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பூம்ராவுக்கு ஐபிஎல் தொடரில் முழு ஓய்வு அளிக்க வேண்டுமென்ற கேப்டன் கோஹ்லியின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கமிட்டி கூட்டத்தில் கோஹ்லி முன்வைத்த இந்த யோசனையை, வாரிய உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். ஐபிஎல் அணி நிர்வாகத்தினர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என அவர்கள் கூறி உள்ளனர். மேலும் இதே கூட்டத்தில் பங்கேற்ற துணை கேப்டன் ரோகித் ஷர்மாவும் கோஹ்லியின் யோசனையை ஏற்க மறுத்துவிட்டார். உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதமும், ஐபிஎல் தொடர் மார்ச் 29 முதல் மே 19 வரையிலும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* வரும் 28ம் தேதி புவனேஸ்வரில் தொடங்க உள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இத்தொடருக்கு அணியை அனுப்பி வைக்க போதிய நிதி இல்லாததால், பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு, அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்திடம் கையேந்தி உள்ளது. கடன் கொடுத்து உதவுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர், ‘கோஹ்லியை விட வெளிநாட்டு வீரர்களையே எனக்கு அதிகம் பிடிக்கும்’ என கூறியதை பார்த்து ஆத்திரமடைந்த கோஹ்லி, ‘நீங்கள் இந்தியாவில் வசிப்பதில்லை அர்த்தமில்லை’ என கருத்து வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. பலரும் கோஹ்லியை வறுத்தெடுத்த நிலையில் நேற்று அவர் விளக்கம் அளித்தார். அவர் தனது ட்வீட்டில், ‘‘என்னை யாரும் கேலி பேசவில்லை என்றே யூகிக்கிறேன்; ஆனாலும் கேலி பேச்சுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். கருத்து கூற எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், விழாக்காலத்தை அன்பாகவும், அமைதியாகவும் சந்தோஷமாக கொண்டாடுங்கள்’’ என கூறி உள்ளார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சில்லி பாயின்ட்...