தேசிய த்ரோபால் தமிழக அணி நவ.11-ல் தேர்வு

சென்னை: சண்டீகரில் நடைபெற உள்ள தேசிய சீனியர் த்ரோபால் போட்டிக்கான தமிழக அணி வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டி முகாம் சென்னையில் நாளை மறுதினம் (நவ.11) நடைபெற உள்ளது.தேசிய 40வது சீனியர் த்ரோபால் போட்டி டிச.25ம் தேதி முதல் 29ம் தேதி வரை  சண்டீகரில் நடைப்பெற உள்ளது. அதேபோல் 13வது தென்னிந்திய அளவிலான த்ரோபால் போட்டி  டிச.7, 8 தேதிகளில் பெங்களூரில் நடைப்பெறும். மேலும் 29வது பெடரேஷன் கப் த்ரோபால் போட்டி  நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் ராஜஸ்தானில் நடக்கும்.
இந்தப் போட்டிகளுக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யும் போட்டித் தேர்வு முகாம்  நவ.11ம்தேதி நடைபெறும். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தூய நெஞ்ச மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இந்த தேர்வு முகாம் நடைபெறும். இதில் தமிழகத்தைச் சேர்ந்த  த்ரோபால் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கலாம். மேலும் தகவலறிய த்ரோபால் விளையாட்டுச் சங்க நிர்வாகிகளை 97893 73344 அல்லது 98410 25254 என்ற எண்ணகளில் தொடர்புக் கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு