விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் : சர்கார் படத்திற்க்கு கமல்ஹாசன் ஆதரவு

சென்னை : விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை பற்றியும்,  கள்ள ஓட்டு பற்றியும் இயக்கி இருந்தார். இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் சர்கார் படத்திற்க்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது; முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்திற்கு சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல என்று தெரிவித்துள்ளார்.  மேலும் விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் என்றும் அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழிந்து நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மாற்றத்தை நோக்கி செயல்படுறோம்....தூத்துக்குடியில் கமல்ஹாசன் பேச்சு