அடுத்த மாதம் பணி துவக்கம் அயோத்தியில் ராமர் கோயில்: விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப்பணி அடுத்த மாதம் தொடங்கும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியில் அகில பாரத துறவியர் பேரவையின் இரண்டு நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள், நாடு முழுவதும் இருந்து பல்வேறு மடாதிபதிகள், துறவிகள் மற்றும் இந்து மத தலைவர்கள், இந்து கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் 2ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி பேசுகையில், ‘‘அயோத்தியில் அடுத்த மாதம் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். இது இருதரப்பு ஒருமித்த கருத்தின்  அடிப்படையில் கட்டப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் அதேசமயத்தில் பதிலுக்கு லக்னோவில் மசூதி கட்டித் தரப்படும். சட்டரீதியான பிரச்னைகளால் அதற்கு இடையூறு வந்தால் வன்முறை  தலைவிரித்தாடும். இவ்வாறு அவர் கூறினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் இவ்வாறு பேசியுள்ளார்.

நாடு முழுவதும் விரைவில் பல தேர்தல்கள் நடக்க உள்ளதால், விஸ்வ இந்து பரிஷத் பாஜ.வுக்கு ஆதரவாக ராமர் கோயில் கட்டுமான பிரச்னையை எழுப்ப ஆரம்பித்துள்ளது என்று எதிர்க்கட்சியினர்  குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: