புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் அறிமுகம்

இந்தியாவில் 125 சிசி ஸ்கூட்டர்களுக்கான மவுசு அதிகரித்து வரும் இவ்வேளையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் புதிய ஸ்கூட்டரை களமிறக்க முடிவுசெய்தது. இதற்காக,  கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ டூயட் 125 என்ற பெயரில் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. அந்த கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் தற்போது ஹீரோ டெஸ்ட்டினி 125 என்ற பெயரில் சிறிய  மாற்றங்களுடன் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய ஸ்கூட்டர் ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் LX மற்றும் VX ஆகிய இரண்டு  வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹீரோ டூயட் ஸ்கூட்டரின் 110 சிசி இன்ஜின் போர் செய்யப்பட்டு 125 சிசி இன்ஜினாக மாற்றம் செய்யப்பட்ட சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இப்புதிய ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு  இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹீரோ நிறுவனத்தின் முதல் ஐ3எஸ் என்ற ஐட்லிங் ஸ்டார்ட்- ஸ்டாப் நுட்பத்துடன் வரும் முதல் மாடலும் இதுதான்.

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர், வெளிப்புறத்தில் அமைந்த  பெட்ரோல் டேங்க் மூடி, ரிமோட் கீ ஓபன், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இப்புதிய ஸ்கூட்டர்,  நோபுள் ரெட், செஸ்ட்நட் பிரான்ஸ், பாந்தர் பிளாக் மற்றும் சில்வர் ஒயிட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எல்எக்ஸ் மாடல் ₹54,650 எக்ஸ்ஷோரூம்  விலையிலும், விஎக்ஸ் மாடல் ₹57,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: