பண்டிகை கொண்டாட்ட பந்தயத்தில் டூ வீலர்களும் கார்களும்!

தீபாவளி பண்டிகை என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். சிறியவர் முதல் பெரியவர் வரை பாகுபாடில்லாமல் மகிழ்ச்சியை வாரி வழங்கும் பண்டிகை இது. இதை மேலும் சிறப்பூட்டும் விதமாக கார், டூ வீலர் என எல்லா விற்பனையிலும் விழாக்கால சலுகைகளும் புதுப் புது தயாரிப்புகளும் கை கோத்துக்கொள்ளும். அப்படி இந்த ஆண்டு தீபாவளியில் கலக்கப்போகும் டூ வீலர், கார்களைப் பற்றி பார்ப்போம்.

Advertising
Advertising

Jupiter Grande 5G

தனது தயாரிப்புகளில் எதிலெல்லாம் புதுமைகளைப் புகுத்த முடியுமோ, அதை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து புதிய அறிமுகங்களை செய்துவருகிறது, இந்திய அளவில் இரு சக்கரவாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம். அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐந்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜூபிடர் ஸ்கூட்டரில் பல்வேறு புதுமைகளை சேர்த்து ‘ஜூபிடர் கிராண்டே, எனும் பெயரில் 5-வது தலைமுறை (5ஜி) ஸ்கூட்டரை அறி

முகம் செய்துள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

ஸ்டார் லைட் நீலநிறத்தில் வெளிவந்துள்ள இதன் முகப்பு விளக்கில் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் அமர்வோர் பிடித்துக்கொள்ள வசதியாக ஒரு கிரிப், கண்ணாடியில் குரோம் டிசைன் என பழைய மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வந்துள்ளது ஜூபிடர் கிராண்டே 5ஜி. மேலும் இப்புதிய ஸ்கூட்டரில் எகனோமீட்டருடன் கூடிய புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்ஸோல், புதிய எல்.ஈ.டி ஹெட்லைட் செட் அப், சில்வர் வண்ணத்திலான ரியர் ஹேண்டில்பார், அகலமான criss-cross stitched maroon சீட், ஸ்டோரேஜ் பகுதியில் மொபைல் சார்ஜிங் வசதி, முன்புற டிஸ்க் பிரேக் (ஆப்ஷனலாக), அலாய் வீல்கள், அட்ஜஸபிள் ஷாக் அப்சர்பர்கள், ஸ்டேண்டர்ட் அம்சமாக கொடுக்கப்பட்டுள்ள Sync Braking System, வெளிப்புறமாக எரிபொருள் நிரப்பும் வசதி, பல இடங்களில் க்ரோம் வேலைப்பாடுகள், புதிய கச்சிதமான தோற்றம் போன்ற எண்ணற்ற புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் 109.7cc சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 8 bhp ஆற்றலையும், 8 Nm டார்க்கையும் வழங்கக்கூடியதாக உள்ளது. மேம்படுத்தப்பட்ட ரகமான புதிய Jupiter Grande 5G ஸ்கூட்டரானது 53,544 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இதில் ஸ்பெஷல் எடிஷன் வெர்ஷனான 110சிசி ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் ஆனது, ஃபிரண்ட் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் ரூ.59,648க்கு

அறிமுகமாகியிருக்கிறது.

 

Benelli TNT 302R

  தீபாவளியை முன்னிட்டு கார், பைக் பிரியர்களுக்காகவே டிசம்பர் வரையிலும்  பல்வேறு பைக்குகள் அறிமுகப்படுத்தவுள்ளன. அந்த ரேசில் இணைந்துள்ளது இத்தாலியன் வருகையான பெனெல்லி டிஎன்டி 302 ஆர் பைக். நூற்றாண்டை கடந்து இருசக்கர வாகனங்கள்

தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பழமையான இந்த இத்தாலிய நிறுவனமானது ஏற்கனவே இந்தியாவில் பல உயர்வகை பைக் மாடல்களை விற்பனை செய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக பெனெல்லி நிறுவனம் தனது டிஎன்டி 302ஆர் பைக் மாடலை பண்டிகை காலத்தையொட்டி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கு முந்தைய மாடலான பெனெல்லி டிஎன்டி 300 பைக்கின் அடிப்படையில்தான் புதிய டிஎன்டி 302எஸ் பைக் மாடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிறிய டிசைன் மாற்றங்களுடன் இந்த பைக் வந்துள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை இங்கு இடம்பெற்றிருக்கின்றன.

இது பார்ப்பதற்கு கேடிஎம் ட்யூக் 390 பைக் போலேவே தோற்றமளிக்கிறது. மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலுமினிய புகைபோக்கி அமைப்பு, முன்சக்கரத்தில் ட்வின் பெட்டல் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.  புதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக்கில் 300 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 38.9 பிஎஸ் பவரையும், 26.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. 16 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக் 203 கிலோ எடை கொண்டது.

 

TATA Hexa XM+

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாட்டா ஆட்டோமொபைல் நிறுவனம், எஸ்யூவி வகை காரான ஹெக்ஸாவை 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த கார் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹெக்ஸா காரின் புதிய பிரிமியம் மாடலான ஹெக்ஸா எக்ஸ் எம்+  என்ற புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய ஹெக்ஸாவில் முந்தைய மாடலைக் காட்டிலும் 16 புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாட்டா ஆரியாவை போல் தயாரிக்கப்பட்டிருக்கும் ஹெக்ஸா காரில் சஃபாரி ஸ்டார்மின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் 2 வருடம் வாரண்டியோடு கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கேமிரா, குரூஸ் கண்ட்ரோல், மழைத்தூறல் விழுந்தவுடனேயே வைப்பர் தானாக செயல்படும் விதமாக ரெயின் சென்ஸிங் வைப்பர், தானாக அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் எக்ஸ்டீரீயர் மிரர்களும், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப் ஆகியவையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. புதிய காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சார்கோல் கிரே அலாய் சக்கரம் இருக்கிறது. இதன் உள்புறத்தில் உள்ள தொடு திரை மிகவும் மென்மையானதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டீரிங் வீல் மென்மையான தோல் பிடிகளைக் கொண்டுள்ளது.

இரட்டை ஏ.சி. வசதி முற்றிலும் ஆட்டோமேட்டிக் முறையில் இயங்குகிறது. முன்புறத்தில் பனிக்காலத்தில் பயன்படுத்தும் ஃபாக் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. வெளிச்சம் குறையத் தொடங்கியவுடனேயே முன்புற முகப்பு விளக்கு தானாகவே எரியத் தொடங்கும். கருமையான உள்புறத்தைக்கொண்ட ஹெக்சா எக்ஸ்.எம்.பிளஸ் மொத்தம் 8 நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.15.27 லட்சத்தில் ஆரம்பமாகிறது. மேலும் இப்புதிய காரில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான மாற்றங்களையும் (கஷ்டமைசேஷன்) டாட்டா நிறுவனமே செய்துதருகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

 

Hyundai santro

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கார் மாடல்கள் இவ்வாண்டு டிசம்பர் வரையிலும் அறிமுகப்படுத்தவிருக்கின்றன. அவ்வகையில் ரூ.3.89 லட்சம் என்ற ஆரம்ப விலையில் நியூ ஜெனரேஷன் சான்ட்ரோ கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐ10 கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரானது,  பழைய சான்ட்ரோ காரை போன்று டால் பாய் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட புதிய வடிவமைப்பில் வந்துள்ளது.

இந்த டால் பாய் டிசைன் காரணமாக, உட்புறத்தில் நல்ல ஹெட்ரூம் இடவசதியும் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் இக்காரானது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். மேலும் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் இக்கார் வெளிவந்துள்ளது.

இந்த மாடலில் 1.1 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரை வழங்குகிறது.  புதிய சக்கர அமைப்பும் டெயில் லைட் க்ளஸ்ட்டரும் புதிய சான்ட்ரோ காருக்கு நவீன யுக மாடல் என்ற தோற்றத்தை தருகிறது.புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89,900 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 

- துருவா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: