வீடு தேடி வரும் நம்ம ஊரு பலகாரங்கள்..!

நம் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு ஊருக்கும் தின்பண்டங்களில் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தின்பண்டங்களை நம்மவர்கள் வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். அதிலும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும்? முன்பெல்லாம் வீட்டில் பலகாரங்கள் செய்து அக்கம்பக்கத்தினருடன் அவற்றை பகிர்ந்து கொள்வதுதான் வழக்கம். ஆனால், இன்றைய காலகட்டம் பலகாரங்களையும், தின்பண்டங்களையும் உண்பதற்கே நேரம் இல்லை பிறகு எப்படி செய்து பகிர்வது என்றாகிவிட்டது.

இப்போது வாழ்க்கை சூழல் வேண்டுமானால் மாறியதற்கேற்ப பலரும் பலகாரங்களை கடைகளிலே வாங்கி தீபாவளி கொண்டாடுகிறார்கள். இன்று பலருக்கு பலகாரம் செய்ய தெரியவில்லை என்பதே மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால், அதற்காக பலகார வகைகளை ருசி பார்க்காமல் இருக்கவா முடியும்? அந்தக் குறையைப் போக்கத்தான் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர்களின் சிறப்பு தின்பண்டங்களை ஆர்டர் செய்தால் உங்கள் வீடுகளுக்கே அனுப்பி வைக்கிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) என்ற இணையதளம். அப்படி சில பாரம்பரிய பலகாரங்களைப் பற்றி பார்ப்போம்.

செட்டிநாட்டுப் பலகாரம்:

தீபாவளி பலகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது செட்டிநாட்டு பலகாரம். மனோலம், தேன்குழல், சீப் சீடை, பாசிப்பயறு மாவு உருண்டை, சின்ன சீடை என பெரிய பட்டியலே போடலாம். இவை ருசியாகவும், தரமாகவும் இருப்பதால் உலகம் முழுவதும் பிரபலம்.

திருநெல்வேலி அல்வா: முழுவதும் கோதுமை கொண்டு செய்யப்படும் அல்வா உடலுக்கு வலுவையும் ஒருவித புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. அதிலும் இருட்டுக்கடை அல்வா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா:

அல்வாவுக்கு எப்படி திருநெல்வேலியோ அதுபோல பால்கோவா என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாதான். திகட்டாத சுவையுடன் மணல் மணலாக இருக்கும்.

சீடை மற்றும் முறுக்கு:

எவ்வளவுதான் இனிப்பு சாப்பிட்டாலும் காரம் உண்டது போல் இருக்காது.

மணப்பாறை முறுக்கு: நம் பாரம்பரிய நொறுக்குத் தீனிகளில் தவிர்க்க முடியாதது முறுக்கு. அதிலும் மணப்பாறை முறுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. எவ்வளவு தின்றாலும் வயிற்றுக்கு எந்த தீங்கும் செய்யாத கரகர முறுக்கு.

இதுபோல் பல பலகாரங்கள் உண்டு சீவல், சேவு, கடலை மிட்டாய், தட்டை நெய் உருண்டை, இன்னும் பல. ஆகவே பல காரம் வீட்டிலேயே செய்ய முடியவில்லை என்ற கவலையில்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால்போதும், உங்கள் இல்லம் தேடி வருகிறது.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள தின்பண்டத்தின் சிறப்பு என்ன என்பது இணையதளத்தில் விலையோடு கொடுக்கப்பட்டுள்ளது. நமக்குப் பிடித்த மற்றும் ஆசைப்பட்டு உண்ண நினைத்த பல ருசியான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து சேரும். பலகாரங்களோடு தீபாவளி பண்டிகையை சுவையாக கொண்டாடுவோம்.

- திருவரசு

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: