சந்தைக்கு வந்திருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்!

விழாக்கால கொண்டாட்டமாக எண்ணற்ற வீட்டு உபயோகப்பொருட்கள் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பொலிவுடன் விற்பனை சந்தையில் வெளிவரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தீபாவளி போனஸ் வந்ததும் ஏதாவது ஒரு பொருளை வாங்கியே ஆகவேண்டும் என்ற முடிவில் இருப்போருக்கு உண்மையிலேயே இது கொண்டாட்ட காலம்தான். எப்போதும் போல் இந்த ஆண்டும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பல தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இனி பார்ப்போம்.

குறைந்த விலை ஸ்மார்ட் போன்

சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் ஒப்போ ‘ரியல் மி 1’ (oppo realme 1) அழகிய வடிவமைப்பு கொண்ட வலிமையான பிராசஸர் ஆகியவற்றுடன் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரையில் எந்த நிறுவனமும் இதைப்போன்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவில்லை. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெம்மரி மற்றும் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெம்மரி மற்றும் 6 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. மெம்மரி ஆகியவற்றுடன் 3 மாடல்களில் இது வெளிவந்துள்ளது. விலை முறையே ரூ.8,990, ரூ.10,990 மற்றும் ரூ.13,990 ஆகும். இதன் தோற்றப்பொலிவு பிரீமியம் ரக பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக உள்ளது.

இதன் சுற்றுப் பகுதி உலோக பகுதிகளை (மெட்டாலிக் ரிம்) கொண்டிருப்பதால் தவறுதலாக  கைநழுவி கீழே விழுந்தாலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. இது 6 அங்குல திரையும், 1080X2160 ரிசல்யூ‌ஷனும் கொண்டது. இதன் மெம்மரியை 256 ஜி.பி. வரை நீட்டித்துக்கொள்ள முடியும். இதில் மூன்று ஸ்லாட்டுகள் உள்ளதால் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டையும் பயன்படுத்த முடியும். தற்போது வந்துள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றில் இத்தகைய வசதி கிடையாது. இதில் 13 எம்.பி. ஸ்னாப்பர் எல்.இ.டி. பிளாஷ் கேமரா உள்ளதால்துல்லியமாக படம் பிடிக்கலாம். முன்பகுதியில் 8 மெகாபிக்ஸல் கேமரா.

   

சாம்சங் புதிய கியூ எல்இடி

புதிய TV மாடல்களில் தலைசிறந்த வடிவமைப்பு, அப்டேட்  செய்யப்பட்ட ஸ்கிரீன் மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாம்சங் புதிய கியூ எல்இடி (samsung qled tv) டிவிக்களில் ஆம்பியன்ட் மோட் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் வெப்பநிலை விவரங்களை திரையில் வழங்குவதோடு, உங்களின் புகைப்படங்களை பேக்கிரவுண்ட் புகைப்படங்களாக செட் செய்யும் வசதியை வழங்குகிறது.

இவற்றில் உள்ள ஒன்-இன் விசிபிள் கனெக்‌ஷன், சிறிய கேபிள் பயனரின் பவர் மற்றும் ஏவி தகவல்களை டிவிக்கு கொண்ட செல்கிறது.  அதிகபட்சம் 15 மீட்டர் நீலமாக இருக்கும் இந்த கேபிள் டிவி டேட்டா அல்லது மின்சார இணைப்பு இருக்கும் இடத்தில் வைக்கவேண்டிய தேவையை போக்குகிறது.

இத்துடன் எஸ் வாய்ஸ் (S VOICE) உடன் உரையாட முடியும். மேலும் ஸ்மார்ட் திங்ஸ் ஆப் வழங்கப்பட்டு இருப்பதால், டிவியை மற்ற இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IOT) சாதனங்களுடன் இணைத்து, தகவல் பரிமாற்றம், நோட்டிஃபிக்கேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.புதிய சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஹார்டுவேர் மற்றும் மென்பொருட்களை இணைத்து அதிக தரமுள்ள சினிமாட்டிக் அனுபவத்தை வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டிருக்கும் 4 ஸ்பீக்கர்கள் ஒவ்வொன்றும் 10W சவுண்ட் எஃபெக்ட் கொண்டது.

இத்துடன் ப்ளூடூத் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஸ்மார்ட் ஹப் அம்சம் இணையத்தில் தரவுகளை வழங்கும் ஜியோ சினிமா, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற பல்வேறு சேவைகளில் உள்ள வீடியோக்களைப் பார்த்து ரசிக்க முடியும்.புதிய 8 சாம்சங் கியூ எல்இடி டிவிக்கள் 55-இன்ச் முதல் 75-இன்ச் வரை கிடைக்கின்றன, இவற்றின் விலை ரூ.2,45,000 முதல் தொடங்குகிறது. என்ட்ரி-லெவல் யுஹெச்டி மாடல் 7100 சீரிஸ் முதல் தொடங்குகிறது. யுஹெச்டி டிவி விலை ரூ.64,900 முதல் தொடங்குகிறது. ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் விலை ரூ.27,500 முதல் தொடங்குகிறது.

ஹேர் டிரையர் எச்பி 8142

மின் மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பில், முன்னணி நிறுவனங்களுள் பிலிப்ஸ் நிறுவனமும் ஒன்று. நிறுவனத்தின் புது முயற்சியாக ஆண்களுக்கான ‘ட்ரிம்மர்’ மற்றும் பெண்களுக்கான ‘ஹேர் டிரையர்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக நேரம் பயன்படுத்தக்கூடிய பேட்டரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரிம்மர்’ மற்றும் ‘ஹேர் டிரையர் எச்பி 8142’ வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கவர்ச்சிகரமான வண்ணங்களிலும், எளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இது அதிக வெப்பக்காற்றை வெளியிடாமல் இதமான காற்றை வரவழைத்து தலைமுடியை உலர வைக்கும். இதனால் முடிக்கு எந்தவிதக் கெடுதலும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.750ல் இருந்து ஆரம்பமாகிறது.

எலெக்ட்ரானிக் டிபன் பாக்ஸ்

மதிய உணவை எடுத்துச் செல்ல உதவும் டிபன் பாக்ஸ் இது. உணவை மறுபடியும் சூடாக்கி சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் வயர் சார்ஜ் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. உணவிற்கு தேவையான வெப்பம் கிடைத்தவுடன் தானாகவே ஆஃப் ஆகிவிடும். இதில் உணவுக் கசிவைத் தடுக்கும் வகையில் டைட்டான மூடி பொருத்தப்பட்டுள்ளது. திரவ உணவுகளுக்கு தனியாக டிரே மூடியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது உணவை புதியதாக வைத்திருக்க உதவுகிறது. அளவு 600 மில்லி ஆகும். பவர் 40 வாட். விலை ரூ.699லிருந்து தொடங்குகிறது.

   

வேக்யூம் கிளீனர்

யுரேகா கம்பெனியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வேக்யூம் கிளீனர் பார்ப்பதற்கு அழகான வடிவிலும் இடத்தை அடைக்காத வண்ணமும் கையாள்வதற்கு எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு அடிஷனல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  அவற்றை இணைத்து தேவைப்படும் இடத்திற்கு தக்கவாறு இடத்தை சுத்தம் செய்துகொள்ளலாம். விலை ரூ.2100ல் இருந்து ஆரம்பமாகிறது.

 

ஹெல்த் பேண்ட்

போர்ட்ரானிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெல்த் பேண்ட் பார்ப்பதற்கு ஸ்லிம்மாகவும், அழகாகவும் கைக்கடிகாரம்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வாட்டர் புரூஃப் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்த அளவுகளை மானிட்டர் செய்கிறது. உடலில் அசாதாரணமான நிகழ்வு ஏற்படும்போது அலாரம் அடித்து நமக்கு உணர்த்தும். இதன் விலை ரூ.1,399ல் இருந்து ஆரம்பமாகிறது.

 - கோ.மீனாட்சி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: