×

பஞ்சாப்பில் ரயில் மோதி 62 பேர் பலி விபத்து நடந்த இடத்தில் மேலும் பலரை காணவில்லை: மக்கள் போராட்டம்; கல்வீச்சு

அமிர்தசரஸ்:  பஞ்சாபில் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதி 62 பேர் கொல்லப்பட்ட விபத்தில் இன்னும் பலரை காணவில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது அவர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோதக் பகுதியில் கடந்த வெள்ளிகிழமை தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, ராவணன் உருவ ெபாம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் தண்டவாளத்தில் நின்றிருந்தபோது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், 61 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 57 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் அமிர்தசரஸ் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஹர்ஷ் (19) என்ற இளைஞர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மக்கள் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்த மேலும் பலரை காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ரயில் மோதி இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  தண்டவாளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பஞ்சாப் ேபாலீஸ் கமாண்டோ, பத்திரிக்கையாளர் ஒருவர் காயமடைந்தனர்.  நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு தண்டவாளத்தில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்ை–்த தொடர்ந்து, விபத்தில் இறந்தவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்கும்படி அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

உபியை சேர்ந்த 10 பேர் பலி
ரயில் விபத்து நடந்து 40 மணி  நேரத்துக்கு பிறகு நேற்று பிற்பகல் 2.16 மணிக்கு அந்த வழித்தடத்தில்  ரயில் போக்குவரத்து தொடங்கியது. ரயில் விபத்தில் பலியானவர்களில் 10 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில நிவாரண ஆணையாளர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,` சுல்தான்பூர் மாவட்டத்தின் சோன்பர்சா கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர். இது தவிர அமேதி, காஜிபூர், அசாம்கார், ஹர்ேடாய் பகுதியை சேர்ந்தவர்கள் 7 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை காணவில்லை
போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜூ என்பவர் கூறுகையில், ‘‘ரயில் மோதியதில் எனது தந்தை இறந்து விட்டார். அவரது சடலத்தை மூடுவதற்காக துணியை எடுக்க சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய சடலத்தை காணவில்லை” என கதறி அழுதார். இதேபோல், காய்கறி வியாபாரி காஜல் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காணவில்லை என உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : train accident ,Punjab Kalviccu , Railway accident in Punjab, missing many, people's struggle and stone
× RELATED ஆந்திராவில் ஏற்பட்ட கொடூரமான ரயில் விபத்து : 19 பேர் பலியான பரிதாபம்!!