ஆர்.கே.சாலையில் பரபரப்பு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி பொதுமக்களை மிரட்டிய போதைவாலிபர் : தட்டிக்கேட்ட பெண்கள் மீது மோதிவிட்டு பறந்தார்

சென்னை:  சென்னை, மெரினா கடற்கரை, ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வாலிபர் ஒருவர் நுங்கம்பாக்கம் நோக்கி காரில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை உரசியபடி சிக்னல்களில் நிற்காமல் மின்னல் வேகத்தில் அந்த கார்  சென்றது. இதைபார்த்த  வாகன ஓட்டிகள் அந்த காரை பின் தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகே மடக்கிப்பிடித்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த பெண்கள் மற்றும் ெபாதுமக்கள் ஏன் இவ்வளவு வேகமாக காரை ஓட்டிசெல்கிறீர்கள் என்று தட்டி கேட்டனர். அதற்கு குடிபோதையில் இருந்த அவர் பெண்களை தகாதவார்த்தையால் திட்டி அடிக்கப்பாய்ந்தார்.

மேலும் நான் யார் என்று தெரியுமா? என்று கேட்டபடி மறுபடியும் அடிக்க பாய்ந்தார். இதையடுத்து போக்குவரத்து எஸ்ஐ மற்றும் காவலர்  வந்து அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றனர். அப்போது போலீசாரையும் அவர் மிரட்டும் தோணியில் பேசினார். இதனால் போலீசார் பேசாமல் ஒதுங்கி நின்றனர். இதையடுத்து அந்த வாலிபர் காரில் தப்ப முயன்றார். இதைபார்த்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காரை சூழ்ந்து கொண்டு போதை வாலிபர்மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த நபர் பெண்கள் மீது காரை ேமாதிவிட்டு அசுரவேகத்தில் பறந்து சென்றார். போதை வாலிபரின் அட்டகாசத்தால் ராதாகிருஷ்ணன் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: