பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ அறிவுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மீத்தேன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு 2 இடங்களை ஒதுக்கீடு செய்யும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். திருமுருகன் காந்தி மீதான தேச துரோக வழக்கானது, பாஜ அரசின் பாசிச போக்கை காட்டுகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: