விழுப்புரத்தில் காவலர் வீரவணக்கநாளில் போலீஸ்காரரின் துப்பாக்கி உடைந்ததால் பரபரப்பு

விழுப்புரம்: பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் காவலர் வீரவணக்கநாள் ஆண்டு தோறும் அக்டோபர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விழுப்பரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மூன்று ரவுண்டுகள் 21 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. இரண்டாவது ரவுண்டில் ஒரு போலீசார் பயன்படுத்திய துப்பாக்கியின் அடிபகுதி துண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனையும் பொருட்படுத்தாமல் அவர் மூன்றாவது ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: