துப்பாக்கி சூட்டில் பலியானோர் உடலை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இதுதொடர்பான வழக்குகள் சிபிசிஐடியில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணையை துவக்கியது. விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோர் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து பெற்றப்பட்டவை தவிர கூடுதல் ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வரும் நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: