×

புது சுடிதார் நிறம் மாறிய விவகாரம் துணிகடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் கடந்த 2008ம் ஆண்டு மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கான துணி கடையில் ஜீன்ஸ், டி-சர்ட், சுடிதார் ஆகியவை ரூ.2,650 கொடுத்து வாங்கி உள்ளார். ஆனால் அந்த சுடிதாரோ வாங்கிய சில நாட்களிலேயே நிறம் மாறியுள்ளது. இதனால், சுந்தரேசன் கடையில் சென்று பலமுறை கேட்டுள்ளார். இருந்தும் யாரும் சரியாக பதிலளிக்காமல் அலைகழித்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுந்தரேசன், துணியின் விலை ரூ.900 மற்றும் இழப்பீடாக ரூ.85 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மோனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணிகடை சார்பில் வாதிடுகையில், ‘‘இந்த வழக்கில் மனுதாரர் கூறியுள்ள புகார் பொய்யானது. துணி சலவை செய்ததால், நிறம் மாற வாய்ப்பே இல்லை. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கூறினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘‘சுடிதாரின் விலை ரூ.900 திரும்ப வழங்க உத்தரவிட்டு, இழப்பீடாக ரூ.10 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரத்தை வழங்க வேண்டும் துணி கடைக்கு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Customer court,orders,Rs 15 thousand,fine,new clothes
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...