குற்றம் செய்பவர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்: சுகந்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர்

பொதுவாக ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்முறைகள் நடப்பதை வெளியில் சொன்னால் அசிங்கம் என்று தான் பெரும்பான்மையான பெண்கள் இதுவரை பார்த்து வந்தனர். காரணம்,  அந்த பெண்களை அருவெறுக்கத்தக்க ஒருவராகத்தான் இந்த சமூகம் பார்க்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் பிரச்சனைகள் என்று வருவார்கள். குறிப்பாக, அலுவலகத்தில் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவு இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் என்று கூறுவார்கள். ஆனால், அவர்களிடம் போலீசிடம் புகார் அளிக்கலாம் என்று ெசான்னால் மறுத்து விடுவார்கள். அலுவலகத்தில் என்னை அசிங்கமாக பார்ப்பார்கள் என்று என்று பயப்படுகின்றனர், அதே நேரத்தில் குற்றவாளியை பார்த்து இந்த சமூகம் கேள்வி எழுப்புவதில்லை.

நிர்பயா அவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது, அவர் ஏன் இரவு நேரத்தில் பயணம் செய்தார் என்று தான் கேள்வி எழுப்புகின்றனர். ஆண் நண்பர் உடன் அந்த நேரத்தில் ஏன் செல்கிறார் என்று கேட்கின்றனர். இதனால் தான் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் சொல்வதில்லை. கடந்த 2 வருடத்திற்கு முன்னர் தனியார் அமைப்பு 5 ஆயிரம் பெண்களிடம் டெல்லியில் ஆய்வு நடத்தியுள்ளது.

இதில், எத்தனை பேர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர் என்று கேள்வி எழுப்பியதற்கு,  4 ஆயிரம் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். அந்த 4 ஆயிரம் பேர் போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது தான் வேதனை. இப்படித்தான் இந்தியாவில் நிலைமை இருக்கிறது. இந்த நேரத்தில் இதை சொன்னால் அசிங்கம் என்ற மனநிலை மாறி, யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கு தான் அசிங்கம் அப்படிங்கிற மனநிலை இப்போது பெண்களிடம் உருவாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மீ டு இயக்கம் தான். அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த மீ டு இந்தியாவில் பிரபலம் ஆகியுள்ளது. மத்திய அமைச்சர் எம்ேஜ அக்பர் 10க்கு மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவர் மீதான புகார் குறித்து பிரதமர் உட்பட யாரும் வாய் திறக்கவில்லை. அதே நேரத்தில் அக்பருக்கு நெருக்கடி ஏற்பட்டதால் அவரே முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல துறைகளில் ெபண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி தான் வருகின்றனர். சமீபத்தில் கூட தமிழக ஐஜி மீது பெண் எஸ்பி  பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக, அந்த எஸ்பி, ஏன்டா இந்த பிரச்சனையை வெளியில் சொன்னோம் என்ற மனநிலையில் தான் இப்போது இருக்கிறார். ஒரு போலீஸ் துறையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிக்கே தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. மீ டூ மூலம் தங்களின் பாதிப்பை வெளியில் சொன்ன பெண்களை எங்கள் அமைப்பு சார்பில் சந்திக்கவிருக்கிறோம்.  இப்போதே நிறைய முக்கிய பிரமுகர்கள் பயந்து போய் உள்ளனர். திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் நம் மீது புகார் வந்து விடுமோ என்ற பயத்தில் இருந்து கொண்டுள்ளனர். நிச்சயமாக பிரபலமான ஒரு சில பேர் இது போன்று பாலியல் தொந்தரவு செய்தால் கண்டிப்பாக நாளை மாட்டிக்ெகாள்வோம் என்று மீ டு இயக்கம் எண்ண வைத்து விட்டது. குற்றம் செய்பவர்களிடம் ஒரு மாற்றத்தை நிச்சயமாக இந்த மீ டூ ஏற்படுத்தும். பெண்களை மீட்டு அவர்களுக்கு உரிய கவுரவத்தை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பல துறைகளில் ெபண்கள் பாலியல்  தொந்தரவுக்கு ஆளாகி தான் வருகின்றனர். சமீபத்தில் கூட தமிழக ஐஜி மீது பெண்  எஸ்பி  பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: