செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் குறிவைக்கப்படுகிறார்களா? Metoo பெண்களுக்கு கேடயமா...ஆயுதமா?

மீ டூ... கடந்த சில மாதங்களாக திடீரென கிளம்பியது இந்த கோஷம். பாலியல் புகார்களை விசாரிக்க சட்டத்தில் ஏற்கனவே வழிகள் இருக்கிறது. தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனைகளும் தரப்பட்டு வருகின்றன. பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக உருவாகியுள்ள புது அவதாரம் தான் மீ டூ. சினிமா, பத்திரிகை உட்பட குறிப்பிட்ட துறைகளில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் புற்றீசல் போல கிளம்ப துவங்கி உள்ளன. பத்தாண்டுக்கு முந்தைய சம்பவங்களை கிளறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது நாள்தோறும் வாடிக்ைகயாகி வருகிறது. மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், பத்திரிகையாளராக இருந்தபோது பணியாற்றிய பெண்கள் சிலர் சுமத்திய குற்றச்சாட்டுகளால் பதவி இழந்தார்.

பாலிவுட்டில் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா முதல், நேற்றுமுன்தினம் நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன்  இன்னமும் பாலியல் குற்றச்சாட்டுகள்  வந்த வண்ணம் உள்ளன. மீ டூ வில் சிக்கியவர்கள் பட்டியலை பார்த்தால் அவ்வளவு பேரும் செல்வாக்கு மிக்கவர்கள். அப்படியானால் சாதாரண இடங்களில் பிரச்னைகள் இல்லையா? பிரபலமாகாதவர்களை ஏன் குறிவைப்பதில்லை. சமூக வலைதளங்களில் அவர்கள் பற்றி மீ டூ தகவல்கள் வருவதில்லை. அமெரிக்காவில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடிகைகள் உட்பட 80 பெண்கள் பாலியல் புகார் கூறியிருந்தனர். வழக்கும் போடப்பட்டது. அவர் படம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டது. வெயின்ட்ஸ்டின் விவகாரம்  தான் உலகம் முழுக்க மீ டூ பரவ காரணமாக இருந்தது. ஓராண்டுக்கு பின் இந்தியாவில் ஊடுருவியுள்ளது. மீ டூ - பெண்களுக்கு, அவர்களின் மாண்பை பாதுகாக்கும் கேடயமா அல்லது பழிவாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமா என்பதை காலம் தான் நிர்ணயிக்கும். இதோ மீ டூ பற்றி நான்கு கோணங்களில் பரபரப்பான அலசல்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: