மறுதேர்தல் நடத்த கோரிய மாலத்தீவு அதிபர் மனு.. உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ்: தேர்தலில் தோற்றது சரி என தீர்ப்பு

மாலே: தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மாலத்தீவில் கடந்த மாதம் 23ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இப்போதைய அதிபர் அப்துல்லா யமீன் மீண்டும் போட்டியிட்டார். இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிக் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவை யமீன் முதலில் ஏற்கவில்லை. பின்னர், சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக தோல்வியை ஏற்பதாக அறிவித்தார். அடுத்த மாதம் 17ம் தேதி பதவி விலகுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் தேர்தல் தோல்வியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாலத்தீவின் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தேர்தலில் மோசடி நடந்தது என்பதை நிரூபிக்க அதிபர் அப்துல்லா யமீன் தவறிவிட்டார். எனவே, அவரது மறு தேர்தல் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தேர்தலில் அவர் அடைந்த தோல்வி சரியானதுதான்’ என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: