×

17ம் தேதி முதல் 3 நாட்களில் சீரடி சாய்பாபா கோயிலில் ரூ5.9 கோடி நன்கொடை

சீரடி:  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் கடந்த 17 முதல் 19ம் தேதி வரை சாய்பாபா ஜீவசமாதி அடைந்த 100வது  ஆண்டு விழா கடைப்பிடிக்கப்பட்டது. இந்த 3 நாளில் ஏராளமான பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக சாய்பாபா சந்த்ஸ்தான் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ரூபல் அக்ரவால் கூறுகையில், “கடந்த 3 நாட்களில் சாய்பாபா கோயிலில் வைக்கப்பட்டு இருந்த நன்கொடை பெட்டிகளில் ரூ2.52 கோடியை பக்தர்கள் நன்கொடையாக செலுத்தி உள்ளனர். இதை தவிர அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி நகரில் ரூ1.46 கோடி வசூலாகியுள்ளது. ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு மூலமாக ரூ1.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ரூ28.24 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களும், வெளிநாட்டு கரன்சியாக ரூ24.55 லட்சமும்  நன்கொடையாக செலுத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து தரிசன டிக்கட்,ஆன்லைன் அனுமதி மூலமாக ரூ78 லட்சமும், லட்டு பிரசாதம் மூலமாக ரூ28.51 லட்சமும் அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது. 3 நாட்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் ெசய்துள்ளனர்” என்றார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saifi ,Sai Baba Temple , Shirdi Sai Baba Temple, Donations
× RELATED திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் வழங்கல்