×

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பதில் காங்கிரஸ் அலட்சியம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைப்பதில் காங்கிரஸ் அரசு அலட்சியத்துடன் நடந்துள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கடந்த 1959ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரின்போது இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். இதை நினைவுகூறும் வகையிலும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்ேடாபர் 21ம் தேதி தேசிய காவலர் நினைவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், இந்த ஆண்டும் டெல்லியில் நேற்று தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லி சாணக்கியபுரியில் 6.12 ஏக்கர் பரப்பளவில் நினைவு சின்னமும், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளன. 30 அடி உயரமும், 238 டன் எடையும் கொண்ட கருப்பு கிரானைட் கல்லில் உயிர்த் தியாகம் செய்த 34,844 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவு சின்னத்தையும், அருங்காட்சியகத்தையும்  பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மறைந்த வீரர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார்.

விழாவில் மோடி பேசியதாவது: காவலர் நினைவு சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பதில் பெருமை அடைகிறேன். அதே நேரம், நான் சில கேள்விகளை கேட்கிறேன். நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் வீரர்களுக்கு ஏன் நினைவு சின்னம் அமைக்கப்படாமல் இருந்தது? இதற்காக ஏன் பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும்? பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தபோது மறைந்த வீரர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

2002ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அத்வானியால் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. சில சட்ட பிரச்னைகள் காரணமாக இந்த பணி நிறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு இருந்த அரசு காவலர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பதில் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டுள்ளது. அந்த அரசு நேர்மையாகவும், முழு மனதுடனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நினைவு சின்னத்தை முன்கூட்டியே கட்டியிருக்கலாம்.

அதற்கு மாறாக முந்தைய காங்கிரஸ் அரசு, இத்திட்டத்திற்கான கோப்புகளை கிடப்பில் போட்டது. 2014ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் உண்மைக்கு சாட்சியாக இருக்கிறோம். ஒருவேளை, கடவுள் இந்த உன்னதமான பணியை செய்வதற்காக என்னை தேர்வு செய்திருக்கலாம்

34 ஆயிரம் வீரர்கள் வீரமரணம்
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 34,844 வீரர்கள் நாட்டுக்காக வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 414 வீரர்கள் இறந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : martyrs ,Congress ,formation ,memorial ,country , Congress,indifference,formation,memorial,martyrs,sacrificed,country,PM,Modi
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி