சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஈரானிலிருந்து குங்குமப் பூ, தங்கம் கடத்தி வந்தவர் கைது: ரூ53 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னை: உரிய ஆவணமில்லாமல் ஈரானிலிருந்து குங்குமப்பூ கடத்திவந்த வாலிபரை  சுங்கத்துறையினர் கைது செய்தனர். ஈரான் நாட்டிலிருந்து பெரியளவில் பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையை சேர்ந்த தனிப்படை அதிகாரிகள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து வருகிற அனைத்து விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சென்னையை சேர்ந்த ஷாகுல் அமீது மரக்காயர் (26) என்பவர் ஈரானுக்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு துபாய் வழியாக சென்னை வந்தார். அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவரது உடமைகளை சோதனையிட்டனர்.

அவரது சூட்கேஸில் துணிகளுக்கு இடையே 200 சிறிய சிறிய பாக்கெட்டுகள் இருந்தன. அதில் பதப்படுத்தப்பப்பட்ட 20 கிலோ குங்குமப்பூ இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ50 லட்சம். சுங்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குங்குமப்பூவை வியாபாரத்துக்காக எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் அவரிடம் வாங்கியதற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள் குங்குமப்பூ பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது  பாக்கெட்டில் 5 கிராம் தங்க நாணயங்கள், 20 மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 100 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ3.5 லட்சம். அதுவும் முறையான அனுமதி இல்லாமல் கடத்தி வந்திருந்தார். இதையடுத்து அதோடு கைது செய்யப்பட்ட ஷாகுல் அமீதை கைது செய்து விசாரிக்கின்றனர்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: