×

சில்லி பாயின்ட்...

* ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதியில் அவர் மங்கோலியாவின் துல்கா துமுரை 5-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

* பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் கனேரியா கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதை அடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி புதிதாக விசாரணை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

* ஜிம்பாப்வே அணியுடன் தாக்காவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. இம்ருல் கேயஸ் 144 ரன் (140 பந்து, 13 பவுண்டரி, 6 சிக்சர்), சைபுதீன் 50 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 25.1 ஓவரில் 100 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

* ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த தொடரில் விக்கெட் வேட்டை நடத்திய பாகிஸ்தான் வேகம் முகமது அப்பாஸ், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* யுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன், பிரதான சுற்றில் முதலாவது இடத்தில் இருந்து தொடங்கும் ‘போல் பொசிஷன்’ உரிமையை பெற்றார். பெராரி அணி வீரர்கள் செபாஸ்டியன் வெட்டல், கிமி ரெய்கோனன் அடுத்த இடங்களில் இருந்து தொடங்க உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Silly Point,
× RELATED தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக்...