×

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு தேசிய காவலர் நினைவு சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் மறைந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959ஆம் ஆண்டு அத்துமீறி நுழைய முயன்ற சீன படைகளுடன் ஏற்பட்ட சண்டையில், 10 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக டெல்லியின் சாணக்கியபுரி பகுதியில், தேசிய காவலர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, காவலர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பதை காங்கிரஸ் அரசு தாமதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார். மேலும், நாட்டிற்குள் நிலவும் அமைதிக்கு போலீசாரே காரணம் எனக் கூறிய அவர், பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,country ,National Guard Memorial ,occasion , PoliceCommemorationDay, Prime Minister Modi, Delhi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...