×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும்  பேராசிரியர் க. அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : G. Anbazhagan ,DMK ,hospital , DMK, Anbazhagan, Apollo Hospital,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்