மதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு

மதுரை:  பன்றி காய்ச்சலுக்கு மதுரையை சேர்ந்த பெண் பலியானார்.50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மணிகண்டன் பன்றி காய்ச்சலுக்கு பலியானார். மேலும், பெரியகுளம் பகுதியை சேர்ந்த பெருமாள், மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு வார்டுகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த 4 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

இதில், ரத்தமாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில், மதுரை பைக்காராவை சேர்ந்த காசிமாயன் மனைவி மீனாட்சி (47), அனுப்பானடியைச் சேர்ந்த சதாசிவம் மகன் அகிலன் (21) ஆகிய இருவருக்கு பன்றிக்காய்ச்சல் (எச்1என்1) கிருமி பாதிப்பு உள்ளது உறுதியானது. இதையடுத்து, இருவருக்கும் தனிப்பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மீனாட்சி பன்றி காய்ச்சலுக்கு பலியானார். இதைத்தொடர்ந்து அகிலன் தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: