காபூல் வாக்குச்சாவடிகளில் தலிபான்கள் தாக்குதல் 170 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதற்கு தலிபான் தீவிரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெறக்கோரி அவர்கள் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று தலைநகர் காபூலில் வாக்குச்சாவடி ஒன்றில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர். அப்போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் வாக்கை பதிவு செய்வதற்காக நீண்ட  வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.  இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 78 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டூஸ் நகரில் வாக்குச்சாவடிகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். குண்டூஸ் நகரை அடுத்துள்ள ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் உட்பட 7க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆப்கானின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் மட்டும் 8 குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்புகளில் மொத்தம் 170 பேர் உயிரிழந்தனர். இதற்கு  தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: