முதல்வரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை: முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கருணாநிதியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், கடந்த ஜூன் 8ம் தேதி தி.நகர் சதாசிவம் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்து ெகாண்டு, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி எஸ்ஐ மணிமேகலை, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில் ேபசுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: