18 தொகுதிகளிலும் போராட்டம் நடத்துவது குறித்து டிடிவி.தினகரனுடன் மாஜி எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடன் அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சசிகலா கைதாகி சிைறக்கு சென்ற பிறகு டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதற்கிடையில் ஆளுனரிடம் முதல்வர் குறித்து மனு ெகாடுத்ததாக தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த காரணத்தால், 18 சட்டமன்ற தொகுதிகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தமிழக அரசின் எந்தவித சலுகைகளும், திட்டங்களும் தங்கள் தொகுதிக்கு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். பல மாஜி எம்.எல்.ஏக்கள் இதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில், அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் டிடிவி.தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 18 மாஜி எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏக்களின் மீதான தகுதி நீக்க வழக்கு குறித்தும், 18 தொகுதிகளிலும் அரசின் எந்த ஒரு திட்டமும் முறையாக சென்றடையவில்லை. எனவே, அரசின் திட்டங்கள் தொகுதிகளுக்கு கிடைக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி 18 தொகுதிகளிலும் போராட்டம் நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதேபோல், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: