தூங்கிவிட்டதால் ரயிலை பிடிக்க தந்திரம் கோவை எக்ஸ்பிரசுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காட்பாடி வாலிபர் சிக்கினார்

சென்னை: கோவை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை சுமார் 6 மணியளவில் மர்மநபர் ஒருவர், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக 2 பேர் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன் என்று கூறிவிட்டு ெதாலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் உஷாரான போலீசார் இது குறித்து உடனடியாக அதே செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் செல்போனை ஆன் செய்து என் பிறந்த நாளில் விளையாட்டாக நண்பர்கள் சொல்லிவிட்டார்கள் என்று கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு செல்போனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் செல்போன் டவரை ைவத்து அந்த மர்மநபர் குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மர்மநபரை கோடம்பாக்கத்தில் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: என் பெயர் நவீன்குமார் (25). நான் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வருகிறேன். எம்பிஏ படித்துவிட்டு தற்ேபாது கோடம்பாக்கத்தில் தங்கி வேலை தேடிவருகிறேன். காலை 6.10க்கு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி செல்ல இருந்தேன். ஆனால் ரூமில் நன்றாக தூங்கிவிட்டேன். இதனால் அந்த ரயிலை பிடிக்க வேறு வழி தெரியாமல் வெடிகுண்டு இருப்பதாக சொன்னால் ரயில் புறப்பட தாமதமாகும் என்பதால் நான், இதுபோன்று செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து வடபழனி போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து  சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: