×

சில்லி பாயின்ட்...

* ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 125 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதியில் அவர் கஜகஸ்தானின் இங்கார் யெர்முகாம்பெட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
* இலங்கையுடன் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் டி/எல் விதிப்படி 18 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை 50 ஓவரில் 273/7; இங்கிலாந்து 27 ஓவரில் 132/2. கடைசி போட்டி கொழும்புவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

* மாஸ்கோவில் நடைபெற்ற கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உள்ளூர் வீராங்கனை டாரியா கசட்கினா 2-6, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா) வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டார்.
* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ரியல் மாட்ரிட் அணி ஹாட்ரிக் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு பின்தங்கியது. லெவான்டே அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
* ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 175வது போட்டி இது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Roulette point
× RELATED சில்லிபாயின்ட்…