காசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்

காசா: காசா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 130 பேர் காயமடைந்துள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய காசா எல்லையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடந்த மார்ச் 30 முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சுமார் 10,000 பாலஸ்தீனியர்கள் ஒன்று கூடி டயர்களை எரித்தும், கற்களை வீசியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 130 பேர் காயமடைந்துள்ளனர்.

1948-ல் இஸ்ரேல் நிர்மாணிக்கப்பட்ட போது பிற பகுதிகளுக்கு துரத்தப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு, அவர்களது நிலத்தை வழங்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும். இஸ்ரேல் ராணுவம் எல்லை பகுதிகளை ஆயுதபிரயோகத்தின் மூலம் வளைத்து போடுவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் தங்களது மீது கையெறி குண்டுகளை வீசியதால் தான், பதிலுக்கு தாங்கள் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக விளக்கம் அளித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இதனால் காசா எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: