×

தக்காளி செடிகளுக்கு கொடிகட்டும் பணி தீவிரம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி பகுதியில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள், தக்காளி செடி மண்ணில் விழுந்து அழுகி விடாமல் இருக்கவும், மழையிலிருந்து பாதுகாக்கவும் கொடிகட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிர்களே அதிகம் விதைக்கப்படுகிறது. காய்கறிகளில் தக்காளி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

   கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து கிராமங்களில் தக்காளி விதைப்பு அதிகளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்த்தில் அவ்வப்போது பெய்த மழையால் பல கிராமங்களில் விதைக்கப்பட்ட தக்காளிகள், செடியிலிருந்து சரிந்து மண்ணோடு கலந்து அழுகியது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

  இந்நிலையில் மழை பெய்தால் செடி கீழே சாயாமல் இருக்கவும், தக்காளியை காத்துகொள்ளவும் செடிகளில் கொடி கட்டி தொங்கவிடும் பணிகளில் தக்காளி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் வடக்கிபாளையம், பொன்னாபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வாரங்களுக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளிக்கு தற்போது கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சாகுபடிசெய்து நன்கு விளைந்துள்ள தக்காளியை காத்துகொள்ள கொடிகட்டி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tomato plants , tomato, pollachi,farmers
× RELATED பருவமழையால் தக்காளி செடிகள் அழுகின: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை