×

அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரம் மாநகராட்சியில் 600 டன் குப்பைக்கழிவு

* அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரம்

சேலம் : ஆயுத பூஜையையொட்டி சேலம் மாநகர பகுதியில் 600 டன் அளவுக்கு ஆங்காங்கே குப்பைக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாதாரண நாட்களில், மாநகர பகுதியில் 400 முதல் 450 டன் அளவுக்கு குப்பைகள் சேகரமாகின்றன. நடப்பாண்டு ஆயுதபூஜை கொண்டாட்டத்தையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களை சுத்தப்படுத்தி, அதில் சேர்ந்த குப்பைகளை பொதுமக்கள் குப்பைத்தொட்டி, சாலையோரம் கொட்டியுள்ளனர்.

இதனால், ஒவ்வொரு தெருவிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள், துணிமணிகள், காய்கறி கழிவுகள், வாழை மரக்கன்றுகள், சாம்பல் பூசணி உள்ளிட்டவை மலை போல் குவிந்துள்ளன.  மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவை மீறி வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் நடுரோட்டில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்துள்ளன. இதனால், முக்கிய சந்திப்புக்களில் ஆயிரக்கணக்கான பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒரு சில இடங்களில் பூசணிக்காய் வழுக்கியதில், வாகனத்தில் சென்றவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். மாநகராட்சி பகுதியில், நேற்று ஒரே நாளில் 800 டன் அளவுக்கு குப்பைகள் சேர்ந்தன. காலையில் இருந்தே குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில், துப்புரவு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். 2 மடங்கு குப்பைகள் சேர்ந்ததால், துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : aayutha pooja,salem, wastages, removal,salem corporation
× RELATED சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு