×

சிறுகுளம் கண்மாய் கரையில் வாகனங்கள் நிறுத்த தடை

சிவகாசி :  தினகரன் செய்தி எதிரொலியாக, சிறுகுளம் கண்மாய் கரையில் வாகனங்களை நிறுத்த, போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது. இதனை அகற்றக் கோரி சிவகாசி வரி செலுத்துவோர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கு அப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிநிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டிக் கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனடிப்படையில், குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு வசதி துறை சார்பில் ஆனையூர் ஊராட்சி சமத்துவபுரம் அருகே வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். அப்போது கட்டிட இடிபாடுகளை அகற்றாமல் விட்டுவிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றபட்ட இடங்களில் சரக்கு லாரிகள், ஆட்டோக்களை நிறுத்தினர்; மேலும் சிலர் கடைகளை அமைத்தனர். இதனால் சிவகாசி-விருதுநகர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிறுகுளம் ஆக்கிரமிப்பு பகுதி இடங்களில் லாரிகள், வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். மேலும் காலி இடத்தினை சுற்றிலும் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். போலீசாரில் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரதது நெரிசல் குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சிறுகுளம் கண்மாய் பகுதியில் உள்ள காலியிடத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைபாதை மேடையும், சிறுவர்களுக்கு பூங்காவும் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shore , parking banned, lake, sivakasi,sirukulam, people
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு