×

சபரிமலையில் 18 படியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ்!

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் வரை வந்த பெண்களுக்கு எதிராக உதவி அர்ச்சகர்கள் 18ம் படி அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று, பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் சபரிமலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக பெண் நிருபர்கள் செல்ல முயன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து பெரும் புயலை கிளப்பி உள்ளன. இதில் முதலில் முயற்சி செய்தவர் சுகாசினி ராஜ் (38). டெல்லியை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த பெண் நிருபரான சுகாசினிராஜ் (38) தனது நண்பருடன் நேற்று முன்தினம் காலை சன்னிதானத்துக்கு செல்ல முயன்றார். அவருடன் போலீசாரும் பாதுகாப்பாக சென்றனர். ஆனால் மரக்கூட்டம் பகுதியில் வைத்து பக்தர்கள் திரண்டு அவரை முற்றுகையிட்டனர். தரிசனம் முடித்து வந்த பக்தர்களும், தரிசனத்துக்கு சென்று கொண்டிருந்த பக்தர்களும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘‘சபரிமலைக்கு பக்தியுடன் வரும் யாராக இருந்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் கடந்த சில தினங்களாக சவால் விட்டுக்கொண்டு சில பெண் இயக்கவாதிகள் தான் வருகின்றனர். போலீஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து சன்னிதானத்துக்கு அழைத்து சென்றது தவறு. பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் சவால் விட்டுக்கொண்டு யாரும் சபரிமலைக்கு வர முயற்சிக்க கூடாது. சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை’’ என கூறினார். மேலும் இன்று சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் வரை வந்த பெண்களுக்கு எதிராக 18ம் படி அருகே தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,Sabarimala , Devaswom board notices ,assisted pilgrims , Sabarimala sitting ,18 feet
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு