×

2 பெண் நுழைய முயற்சி: 18ம் படி முன் அர்ச்சகர்கள் தர்ணா

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் பக்தர்கள் மட்டுமின்றி, 18ம் படி முன்பு அமர்ந்து அர்ச்சகர்கள் தர்ணா செய்ததை அடுத்து, சன்னிதானத்திற்குள் நுழைய முயன்ற 2 இளம் பெண்கள் திரும்பி சென்றனர். தெலங்கானாவை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா,சமூக செயல்பாட்டாளர் ரஹ்னா பாத்திமாஆகிய   இருவரையும் நேற்று காலை 6.45 மணிக்கு ஐ.ஜி. ஜித் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்து சென்றனர். கவிதாவுக்கு போலீசார் அணியும் பாதுகாப்பு உடையும், ஹெல்மெட்டும் வழங்கப்பட்டது. ரெஹ்னா இருமுடி கட்டுடன் வந்தார்.

கோயில் நடைப்பந்தல் அருகே திரண்ட பக்தர்கள் இவர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பக்தர்கள்  தரையில் படுத்து போராடினர். மேலும், கோயில் அர்ச்சகர்கள்,  உதவியாளர்கள் 18ம் படி முன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர் இதையடுத்து கவிதா மற்றும் ரெஹ்னா பாத்திமா ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் பம்பைக்கு திரும்பினர். இது தொடர்பாக கேரள டிஜிபி ேலாக்நாத் பெக்ராவை கவர்னர் அழைத்து சபரிமலை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woman,sabarimalai
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...