×

முதல்வரின் ஒப்புதல் பெற்ற கண்காணிப்பு பொறியாளர் பட்டியலில் குளறுபடி: 2 முறை கையெழுத்து பெற்றதால் பொதுப்பணித்துறையில் சர்ச்சை

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மற்றும் நீர்வள பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், ஏரி, அணைகள் புனரமைப்பு, புதிய அணைக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது.  அவ்வாறு நடக்கும் பணிகளை மேற்பார்வை செய்வது கண்காணிப்பு பொறியாளர்களின் முக்கிய வேலையாக உள்ளது. இதில் 35 பணியிடங்கள் காலியாக உள்ளது.
குறிப்பாக, தஞ்சை கீழ் காவிரி வடிநில வட்டம், பெரியாறு வைகை, கீழ் வைகை வடிநில வட்டம், தாமிரபரணி வடிநில வட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு பொறியாளர் இல்லாமல் பல்வேறு பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது என்ற புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் 52 தகுதியான பொறியாளர்கள் பட்டியில் தயார் செயயப்பட்டு, முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த பட்டியல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென பட்டியலில் சில பெயர் விட்டு விட்டதாக கூறி மீண்டும் அந்த பட்டியலை மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த பட்டியலுக்கு இரண்டாவது முறை முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து, அந்த பட்டியலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது வரை பதவி உயர்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அந்தெந்த பணியிடங்களில் நியமிக்கும் வகையில் பணியிட மாற்றம் செய்து இருக்க வேண்டும்.

ஆனால், ஒரே பணியிடத்திற்கு பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்ற பலரும் போட்டி போடுவதால் யாருக்கு கொடுப்பது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது வரை கண்காணிப்பு பொறியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதன் விளைவு தெரியாமல் கண்காணிப்பு பொறியாளர்களை நியமிக்காமல் இருப்பதால் வெள்ள தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொறியாளர்கள் யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Engineer ,department , Chief Minister Approved, Public Service Department
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...