×

575 சார்பதிவு அலுவலகங்களில் 46 கோடி பழைய பத்திர பக்கங்களின் நகல்: சார்பதிவாளர்கள் அறிக்கை தாக்கல்

சென்னை: சார்பதிவு அலுவலகங்களில் 46 கோடி பழைய பத்திர பக்கங்களின் நகல்கள் இருப்பதாக சார்பதிவாளர்கள் ஐஜி அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த பத்திரங்களின் நகல்களை டிசம்பர் இறுதிக்குள் கணினியில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், ெசாத்தை வாங்கிய நபர்களிடம் அசல் பத்திரம் தரப்படுகிறது. அந்த பத்திரத்தின் நகல் சார்பதிவு அலுவலகங்களில் தொகுதி (volume) ஆக தொகுத்து பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. அந்த பத்திர நகலை சம்பந்தப்பட்ட சொத்தை வாங்கிய நபர்கள் தங்களது பத்திரம் தொலைந்து போனால் சார்பதிவு அலுவலகத்திற்கு சென்று பெற்று ெகாள்ளலாம்.

எனவே, அந்த பத்திரத்தை சார்பதிவாளர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடந்த 2009 ஜூலை 6ம் தேதிக்கு பிறகு அனைத்து பத்திர பதிவுகளும் கணினி வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால், அந்த பத்திரங்கள் நகல் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்கள் நகல்களை எளிதாக பெற முடிந்தது. ஆனால், 1865 முதல் 2009 ஜூலை 5ம் தேதி வரை பதிவான பத்திரங்கள் நகல்கள் அனைத்தும் தற்போது வரை தொகுதி ஆக தொகுத்து தான் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பத்திரங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு சார்பதிவு அலுவலகங்களில் எத்தனை பழைய பத்திரங்கள் உள்ளது என்ற தகவல்கள் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பழைய பத்திர நகல்களின் விவரங்களை தருமாறு அனைத்து சார்பதிவு அலுவலகத்திற்கு ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி அனைத்து சார்பதிவு அலுவலகங்களில் தங்களிடம் உள்ள பழைய பத்திரங்களின் நகல்கள் விவரங்களை பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில், 46 கோடி பழைய பத்திர பக்கங்களின் நகல்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த பத்திரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் இப்பணிகள் நடக்கிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் பத்திர நகல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்படும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : offices , 575 Offshore Offices, Old Bond, Copy, Respondents
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...