×

சவுதியின் முதலீட்டு மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

இஸ்லாமாபாத் : சவுதி அரேபியாவில் வரும் 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள ‘எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாட்டில்’ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்கவுள்ளார். எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாடு, சவுதி அரேபியாவின் ரியாத்தில் வரும் 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை ஒட்டிய பொருளாதாரத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் கடந்த ஆண்டு 90 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 800 பிரதிநிதிகள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியின் சவுதி தூதரகத்தில் கடந்த 2ம் தேதி மாயமானதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜேபி மார்கன், போர்டு, கூகுள் உள்ளிட்டவையும் இந்த ஆண்டு இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளன. இந்நிலையில், சவுதி மன்னர் சல்மானின் சிறப்பு அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,Saudi Investment Conference , Pakistan participation , Saudi Investment Conference
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி