×

மணிப்பூரில் முதல்வர் விழா நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் கங்போக்பி மாவட்டத்தில் கங்போக்பி பஜாரில்  பெண்கள் சந்தைக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பைரோன் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.முன்னதாக இந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.10 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. விழாவை சீர்குலைப்பதற்காக இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Manipur ,ceremony , Blast , Manipur's Chief Minister's, ceremony
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...