×

முத்தலாக் போல ஏன் நடக்கவில்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பாபர் மசூதி இடிப்பின்போது நடத்தப்பட்டதை போலவே தற்பொழுது சபரிமலை விவகாரத்திலும் ஆர்எஸ்எஸ் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் சபரிமலை விவகாரத்தில் அது தோல்வியையே அடையும். ஆண் மற்றும் பெண்ணிற்கு இடையே சமஉரிமையை பாதுகாக்க சட்டம் (முத்தலாக் விவகாரம்) கொண்டு வந்ததுபோல, சபரிமலை விவகாரத்திலும் ஏன் மத்திய பாஜ அரசு நடந்து கொள்ளவில்லை?” என்று தெரிவித்தார்.

200 பேர் மீது வழக்கு

சன்னிதானத்தில் ேபாராட்டம் நடத்திய 200 பக்தர்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சன்னிதானம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத கலவரத்தை தூண்ட சதித்திட்டம்

தொடர்ந்து கடகம்பள்ளி சுரேந்திரன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சபரிமலையில் இன்றைய(நேற்றைய) பிரச்னையை காரணமாக வைத்துக்கொண்டு கேரளா முழுவதும் மத மோதலை தூண்ட சதி திட்டம் தீட்டியதால் தான் இந்த விவகாரத்தில் நான் தலையிட்டேன். இளம் பெண்கள் 2 பேரும் பம்பையில் இருந்து சன்னிதானம் நடைப்பந்தலை அடையும்வரை எந்த இடத்திலும் எதிர்ப்புகள் ஏற்படவில்லை. இருவரும் 18ம் படி ஏறினால் அதன்பிறகு கேரளா முழவதும் மத கலவரத்தை தூண்ட சிலர் சதி திட்டம் தீட்டுகின்றனர். சன்னிதானத்தை ரத்தக்களமாக்கி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதனால்தான் நான் இந்த விவகாரத்தில் தலையிட்டேன். இவ்வாறு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Why did not happen , muttalak
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன்...