×

கவசம் அளித்ததால் போலீசுக்கு கண்டனம்

கவிதாவுக்கு போலீசார் ஹெல்மெட், கவச உடை அணிவித்து அழைத்து சென்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போலீஸ் அல்லாதவர்களுக்கு கவச உடை வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ்சென்னித்தலா, பாஜ தலைவர் சுரேந்திரன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் ஐஜி ஜித் இதை மறுத்துள்ளார். கவிதாவுக்கு போலீஸ் உடை வழங்கவில்லை ஹெல்மெட்டும், கவசமும் மட்டுமே அளிக்கப்பட்டது. இதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார்.

மதக்கலவரத்தை தூண்ட சதி

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத நம்பிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிரானது அல்ல. ஆனால் மத நம்பிக்கையை பயன்படுத்தி மக்களிடையே கலவரத்தை தூண்டுவதை தான் எதிர்க்கிறோம். சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி மத கலவரத்தை தூண்டி அரசியல் லாபத்திற்கு பா.ஜ., முயல்கிறது. காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணையாக இருக்கிறது. பெண்ணியவாதிகள் சபரிமலை செல்வதில் தவறில்லை. அவர்கள் வேண்டும் என்றே பிரச்னைகளை உருவாக்க செல்லக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது. பம்பையிலும் நிலைக்கலிலும் ஆர்எஸ்எஸ்காரர்கள் தான் கலவரத்தை தூண்டுகின்றனர். காவல்துறையினரிடமும் மத வேற்றுமையை ஏற்படுத்தி பிரச்னையை அதிகாரிக்க பா.ஜ., முயல்கிறது’’ என்றார்.

144 தடை நீட்டிப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட 17ம் ேததி நிலைக்கலில் வன்முறை வெடித்தது. இதையடுத்து சபரிமலை, பம்பை, நிலைக்கல், இலவுங்கல் பகுதிகளில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் லோஹ் உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சபரிமலையில் பதட்டம் அதிகரித்துள்ளதால் மேலும் 3 நாட்களுக்கு தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கோயில் நடை சாத்தப்படும். 22ம் தேதிவரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

சட்டத்தை கையிலெடுக்க தயங்கமாட்டோம்

பா.ஜ., மாநில நிர்வாகி சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை விவகாரத்தில் பாஜ தொண்டர்கள் இதுவரை மிகவும் அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் அரசு ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. மறுசீராய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன் இளம் பெண்களை சபரிமலைக்கு அனுப்பி விட வேண்டும் என்ற சதித்திட்டம் தீட்டி தேவசம்போர்டும், அரசும் செயல்பட்டு வந்துள்ளன. இது சபரிமலையின் புகழை சீர்குலைக்க நடைபெறும் சதியாகும். இந்த நிலை மேலும் தொடர்ந்தால் சட்டத்தை கையில் எடுக்கவும் தயங்கமாட்டோம். சபரிமலைக்கு இன்று வந்த 2 இளம் பெண்களும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்திய பின்னரே சன்னிதானத்துக்கு சென்றனர். இதன்மூலம் அரசின் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இந்த விகாரத்தில் தலையிட்டு ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Condemned, police,armor
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...