×

கவிதா, ரஹ்னா பாத்திமாவை சபரிமலைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்ற ஐஜி ஸ்ரீஜித் : போலீசார் விளக்கம்

கவிதா, ரஹ்னா பாத்திமாவை சபரிமலைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்ற ஐஜி ஸ்ரீஜித் கூறியதாவது: இருவரையும் அழைத்து சென்றபோது சன்னிதானம் வரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் நடைப்பந்தல் பகுதியில் வைத்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பக்தர்களின் எதிர்ப்பு எங்களுக்கு ஒரு போருட்டல்ல. ஆனால் கோயில் நடையை மூடப்ேபாவதாக தந்திரி கூறியதால் தான் ேவறு வழியின்றி இருவரையும் திருப்பி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டது. இனி இளம் பெண்கள் வந்தால் அவர்களை அனுமதிப்பதா என்பது குறித்து அப்போது தீர்மானிக்கப்படும்.

லிபி ஜார்ஜ் மீது வழக்கு

ஆலப்புழா அருகே  சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் லிபி ஜார்ஜ். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்  சபரிலை செல்ல மாலை போட்டு வந்திருந்தார். பத்தனம்திட்டா பஸ் ஸ்டண்டில் அவரை  பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவரை போலீசார்  மீட்டனர். பின்னர் பாதுகாப்புடன் சபரிமலைக்கு அனுப்பி வைப்பதாக அவரிடம்  கூறினர். ஆனால் எதிர்ப்பு வலுத்ததால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று  போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் திரும்பி சென்றார். இந்நிலையில் லிபி ஜார்ஜ் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு  செய்யக்கோரி பா.ஜ.,வினர் பத்தனம்திட்டா ேபாலீசில் புகார் அளித்தனர். ேபஸ்  புக்கில் இந்து மதம் குறித்து லிபி ஜார்ஜ் கருத்துகள் பதிவிட்டிருப்பதாக  புகாரில் தெரிவிக்கப்ப்டடது. இதையடுத்து லிபி ஜார்ஜ் மீது ேபாலீசார்  வழக்குப்பதிவு செய்தனர்.

சபரிமலை புகழை சீர்குலைக்க சதி

கேரள எதிர்கட்சி தலைவரான காங்கிரசின் சென்னித்தலா கூறியது: சபரிமலை விவகாரத்தில் மார்க்சிஸ்ட், ஆர்எஸ்எஸ் கட்சிகள் சதிதிட்டங்களை தீட்டி அரங்கேற்றி வருகின்றன. அரசின் அலட்சிய போக்குதான் கடந்த சில தினங்களாக நடந்து வரும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். போலீஸ் உடையில் இளம் பெண்ணை அழைத்து சென்றது மோசமான நடவடிக்கை. சபரிமலை கோயில் விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் அரசு ஏன் இவ்வளவு வேகம் காண்பிக்கிறது. போலீஸ் தரப்பில் பெரும் தவறு நடந்துள்ளது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. இது சபரிமலை கோயிலின் புகழை சீர்குலைக்க நடந்த சதியாகும். ஒன்றோ, இரண்டோ நபர்களுக்காக அனைத்து பக்தர்களின் மனதும் புண்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IG Sreejith ,Sabarimala ,Kavitha ,Rahna Fatima: Police , IG Sreejith, Sabarimala by Kavitha, Rahna Fatima, Police explanation
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு