×

நெறிமுறை வெளியிட்டது ஆர்பிஐ வாலட்டுக்குள் பணம் அனுப்புவது எப்போது?

புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மிக முக்கிய பங்கு வகிப்பவை மொபைல் வாலட்கள். பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பிராட்பேண்ட் வசதி இல்லாத கிராமங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள மொபைல் வாலட்கள்தான் உதவிகரமாக இருந்துள்ளன. ஆனால், ஒரு வாலட்டில் இருந்து வேறு நிறுவன வாலட்டுக்கு பணம் பரிவர்த்தனை செய்ய இயலாது. வாலட்களுக்கள் பரிவர்த்தனை வசதியை கொண்டுவர ரிசர்வ் வங்கி உத்தேசித்திருந்தது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி மொபைல் வாலட், இ-வாலட், வங்கி கணக்கு சார்ந்த வாலட்களிடையே பணம் அனுப்புவது யுபிஐ மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

கேஒய்சி விதிமுறைகளை முழுமையாக பூர்த்தி  செய்திருக்க வேண்டும். தேசிய பரிவர்த்தனை கழக விதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். பணம் மட்டுமின்றி, பரிசாக அனுப்புவதையும் வாலட்களிடையே மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நெறிமுறைகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாலட்களிடையிலான பரிவர்த்தனை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RBI , Protocol, RPI Wallet, Sending Money
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு