×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா - ஒமான் இன்று மோதல்

மஸ்கட்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஒமான் அணியுடன் இன்று மோதுகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதும் இந்த தொடர், மஸ்கட்டில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று ஒமான் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.40க்கு தொடங்குகிறது. முன்னதாக, இரவு 8.25க்கு தொடங்கும் தொடக்க போட்டியில் மலேசியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜப்பான் (அக். 21), மலேசியா (அக். 23), தென் கொரியா (அக். 24) அணிகளுடன் இந்தியா மோதுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Champions Trophy Hockey India ,confrontation ,Oman , Asian Champions, Trophy Hockey, India, Oman
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி