×

யூத் ஒலிம்பிக்ஸ்: ட்ரிபிள் ஜம்ப்பில் சுவிஸ் வீராங்கனை அசத்தல்

* வெளிநாட்டு தொடர்களின்போது, வீரர்களின் மனைவியர் தொடர் முழுவதும் உடன் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோஹ்லி விடுத்திருந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து சொநத காரணங்களுக்காக விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டித் தொடர் 21ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. லூயிசுக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் கியரன் பாவெல் மற்றும் டி20 போட்டிகளில் நிகோலஸ் பூரன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.
* ஐசிசி ஊழல் தடுப்புக்குழு விசாரணையில், இலங்கை அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* யூத் ஒலிம்பிக்ஸ் தொடரின் ஆண்கள் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Youth Olympic Games ,Swiss , Youth Olympics, Swiss in Triple Jum
× RELATED ஸ்விஸ்-க்கே டஃப் கொடுக்கும்...